பழங்களின் கழிவுகளால் வீதிகளில் சுகாதாரச் சீர்கேடு – சுகாதாரப் பிரிவினர்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் றம்புட்டான் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் அவற்றை சாப்பிட்டு விட்டு அதன் வெளிக்கோதுகளை வீதிகளில் வீசிவிட்டுச் செல்வதைத் தவிரக்க வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் கேட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரிலும் நகரை அண்டிய புறநகர்ப்பகுதிகளிலும் றம்புட்டான் பழங்கள் வீதிகளில் வைத்து விற்கப்படுகின்றன. இதனால் வீதியால் செல்வோர் அவற்றை வாங்கிச் சாப்பிட்டு அதே இடத்திலேயே வீசிவிட்டுச் செல்கின்றமையால் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன.
றம்புட்டான் உட்பட சகல பழங்களின் கழிவுகளைப் பயணிக்கும் வீதிகள் மற்றும் பொது இடங்களில் போட்டுவிட்டுச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
உலக காலநிலை அமைப்பு எச்சரிக்கை!
இலங்கையில் புதிய அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக...
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு - கடற்றொழிலிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்க...
|
|