பல்கலை பாடப்பரப்பிற்குள் தகவல் அறியும் சட்டமூலம்!
Wednesday, May 2nd, 2018
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான எண்ணக்கரு மற்றும் பாடப்பரப்பு என்பவற்றை எதிர்வரும் 2020 ஆண்டு முதல் கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பாடங்களில் உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் ஊடகத்துறை ஆகிய பாடங்களிலும் அரச பணியாளர்களின் தடைதாண்டல் பரீட்சைகளிலும் இந்த விடயதானம் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கல்வியல் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பியதிஸ்ஸ ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!
யுத்தத்தின் விளைவு – வடக்கில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் வீதம் அதிகரிப்பு!
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...
|
|
|


