பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!
Sunday, April 16th, 2023
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (17) முதல் கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பல நாட்களாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கமுடியாது என பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதனால், உயர்தர விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சுமார் 2 மாதங்களாக தாமதமாகியுள்ளன.
இந்தநிலையில், பல்கலைகழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் மிக விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத சந்தர்ப்பத்தில், பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவர் என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


