பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
Tuesday, September 28th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, விண்ணப்பித்துள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்காக இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 42 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
450 அரச நிறுவனங்கள் கோப் குழுவால் விசாரிக்கப்படும்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்!
வறுமை ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி!
|
|
|


