பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
Friday, December 10th, 2021
2020 ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் நீடிக்கப் பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் நீடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக குறித்த பதிவு நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் வேகமாக பரவும் மலேரியா!
சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபொதும் இடமளிக்கப் மாட்டேன் - ஜனாதிபதி ரணில் விக்...
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை - மக்களை தவறாக வழிநடத்...
|
|
|


