பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்றையதினம்பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை (27) மதியம் இடம்பெற்ற ஜும்மா தொழுகையினை தொடர்ந்து போராட்டகாரர்கள் ஐந்து சந்தி வரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் சர்வதேச சட்டங்கள் இஸ்ரேலுக்கு பொருந்தாதா , அமெரிக்காவின் குழந்தை இஸ்ரேலே தாக்குதலை உடன் நிறுத்து போன்ற வாசகங்கள் மும்மொழிகளிலும் அடங்கிய அட்டைகள் போராட்டகாரர்களால் தாங்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே தற்போது மோதல் இடம்பெற்று வருகின்றமை சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
000
Related posts:
குவைத்தில் பணி புரியும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
நல்லூர் பிரதேச சபை அமர்வில் கடும் அமளிதுமளி!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
|
|
|


