பற்தூரிகை மற்றும் கார்பன் பேனைகளை மீள்சுழற்சி செய்ய விசேட நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 11th, 2021

நாட்டில் பாவிக்கப்பட்ட பற்தூரிகை மற்றும் கார்பன் பேனைகளை சேகரித்து மீள் சுழற்சி செய்யும் புதிய வேலைத்திட்டமொன்றை சுற்றாடல் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இவை இரண்டும் மண்ணில் உக்குவதற்கு சுமார் 400 வருடங்கள் எடுப்பதாக ஆய்வுகள் தெரிவித்ததையடுத்து மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுச் சூழலில் வீசி எறியப்படும் பற்தூரிகை மற்றும் கார்பன் பேனைகளை சேகரித்து அவற்றை மீள் சுழற்சி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த பொருட்களை சேகரிப்பதற்கென விசேட கொள்கலனொன்றையும்  சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: