பருவநிலையில் மாற்றம்: இன்று முதல் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Monday, December 3rd, 2018
பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்றுமுதல் நாட்டில் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய, மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!
புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் - மானியம்...
|
|
|


