பருத்தித்துறை பிரதேச சபைக்கு புதிய கட்டடம்!
Saturday, April 2nd, 2016
பருத்தித்துறைப் பிரதேச சபைக்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(2) நடைபெற்றது.
பிரதேச சபை செயலாளர் திருமதி சத்தியபாமா தர்மராசா தலைமையில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இதுவரைகாலமும் தற்காலிக கட்டடதில் இயங்கிவந்த குறித்த பிரதேசசபை, தற்போது நெல்சிப் திட்டத்தின் உதவியுடன் பருத்தித்துறை பிரதேச சபைக்கு சொந்தமான பொதுநூலக கட்டடத்தை அகற்றி 15 மில்லியன் ரூபா செலவில் நிரந்தரமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி இமைப்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
முல்லைத்தீவில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி!
அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் - மகிந்த ராஜபக்ஷ!
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு - துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்ற...
|
|
|


