பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கிளினிக் விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்!

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கிளினிக் விவரங்கள் நோயாளர்களின் நன்மை கருதி இரண்டு வாரங்களுக்குள் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளினிக் விவரங்கள் நோயாளர்களுக்கு தெரியப்படுத்தாமையினால் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து குழந்தை மருத்துவ சிகிச்சைப் பிரிவு, கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு, தோல் சிகிச்சைப் பிரிவு ஆகிய கிளினிக்குகள் கடந்த சில வருடங்களாக சீராக நடைபெறுவதில்லை.
மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மருத்துவமனையினரை நோயாளர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இரண்டு வாரங்களில் காட்சிப்படுத்துவதற்கு அச்சுப்பதிக்க கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அனைத்து விவரங்களும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படும்.
Related posts:
|
|