பரீட்சை வினாவில் தவறு; புள்ளிகளை வழங்க தீர்மானம்!

Tuesday, August 21st, 2018

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளின் ஒரு வினா தமிழில் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த வினாவிற்கு அனைத்து மாணவ மாணவியருக்கும் முழுப் புள்ளிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பகுதி 1 வினாத்தாளின் 13ஆம் இலக்க வினாவிற்கு இவ்வாறு முழுப் புள்ளிகள் வழங்குவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மொழி பெயர்ப்பு பிழையினால் இவ்வாறு குறித்த வினாவிற்கு அனைத்து மாணவ மாணவியருக்கும் புள்ளி வழங்கப்பட உள்ளது.

பழமொழி ஒன்று தொடர்பிலான வினாவிற்கு பொருத்தமான விடை எதுவும் பல்தேர்வு விடைகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், தமிழ் மொழி பெயர்ப்பில் இவ்வாறு விடை இருக்கவில்லை என பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சகல பரீட்சார்த்திகளுக்கும் அந்த வினாவிற்கான புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்த வருடத்திலும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பிலான வினா ஒன்றில் ஏற்பட்ட குளறுபடியைத் தொடர்ந்து அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் புள்ளி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இம்முறை பரீட்சையில் எந்தவொரு மாணவ மாணவியரும் பூஜ்ஜிய புள்ளிகளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: