பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு – விசேட ரோந்து பணிகளில் பொலிஸார்!
Monday, May 23rd, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் ஒரு சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை வினாத்தாள் போக்குவரத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், பொலிஸார் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சை நடைபெறும் காலத்தில் வீதிகளை மறித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு: திங்களன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை - மஹிந்த த...
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணி - மத்...
|
|
|


