பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, February 24th, 2020

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழுவிற்கும் அறிவிக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதற்கான மென்பொருள் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இதனூடாக உயர்தரப் பரீட்சை வரை விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: