பரீட்சை திணைக்களத்தில் முறைகேடு : ஆணையாளருக்கு எதிராக விசாரணை?

பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற சில முறைகேடுகள், மோசடிகள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுதன் அடிப்படையில் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து பரீட்சை ஆணையாளர் தொடர்பில் விசாரணை நடத்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், விசாரணை குழுவொன்றை நியமித்துள்ளார். நீண்ட காலமாக இடம்பெற்ற மோசடிகள் மற்றும் அண்மைய நாட்களில் பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக் குழு பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பரீட்சை திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் சில வெளிநபர்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|