பரீட்சையில் திறமை சித்திகளுடன் சித்தியெத்திய மாணவர்களுக்கு நேர்முக பரீட்சை!
Sunday, April 22nd, 2018
அண்மையில் வெளியான கபொத சாதாரண தர பரீட்சையில் திறமை சித்திகளுடன் சித்தியெத்திய மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானதை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக, கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார்
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் சிலவற்றில் இதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளில் நேர்முக பரீட்சை இரண்டாம் தவணை ஆரம்பமான பின்னர் நடைபெறவுள்ளது. கபொத சாதாரண தர பரீட்சையில் கூடுதலான புள்ளிகளை பெற்ற பாடசாலை மாணவர்கள் நிலவு வெற்றிடங்களுக்கு அமைவாக பாடசாலைகளில் உள்வாங்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் உயர்தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
|
|
|


