பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை – கல்வி அமைச்சு !
Thursday, May 21st, 2020
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
கண்டி – குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
கால அட்டவணைகளுக்கு அமைய பாடத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும்மெனவும், அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே பாடசாலைகளும் மீளத் திறக்கப்படவுள்ளதாகவும் என்.எச்.எம். சித்ரானந்த மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
வாள்வெட்டுக் காரர்கள் உருவாக வெளிநாட்டுப் பணம் தான் காரணம் - நீதிபதி இளஞ்செழியன் குற்றச்சாட்டு!
இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்வு!
மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்தது குமுதினி!
|
|
|


