பரிந்துரைக்கப்படும் சுகாதார விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்பு வழங்க தயார் – பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி!

Monday, May 11th, 2020

பரிந்துரைக்கப்படும் உரிய சுகாதார விதிமுறைகளின் கீழ் பொதுத்தேர்தலை நடத்த தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று பார்த்துக் கொண்டிப்பதும் யதார்த்தமற்றது. எனினும் எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை வரும்போது தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என்றும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களின்போது அனைத்து கட்சிகளினதும் பிரச்சாரக்கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

வாக்களிப்பு நிலையங்களுக்கும், வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் கட்சிகளின் அதிகளவான பிரதிநிதிகள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு குறைந்த தொகையினர் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இதன்போது சீசீடிவி கருவிகளை கண்காணிப்புக்களுக்காக பயன்படுத்தமுடியும் என்று ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் ஆலோசனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: