பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!

பரந்தன் – பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வேலணையைச் சொந்த இடமாகவும் யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் இன்று நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே விபத்து இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
பஞ்சாப் ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு!
இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை!
|
|
நான் இழந்ததை பணத்தால் ஈடுசெய்ய முடியாது : நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கம் - குசல்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்றுமுதல் மேற்கொள்ளப்படும் - பல்கலைக்கழக மானியங்கள்...
இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக...