பயண கட்டுப்பாட்டிற்கு அப்பால் இறுக்கமான தீர்மானம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
Friday, August 13th, 2021
இலங்கையில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பரவலுக்கு மத்தியில் பயணக்கட்டுப்பாட்டிற்கு அப்பால் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்றைதினம் இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு குழு செயலணியில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சுகாதார அமைச்சின் பிரதானிகள் சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றை நேற்றுமாலை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சி இன்று காலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


