பயணிகளை ஏற்றிய பேருந்து சாரதிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அலுவலக பேருந்துகள் ஆறில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து சாரதிகள் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு, பொலிசார் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் குறித்த பேருந்துகள் சிக்கின.
கடந்த 27ம் திகதி கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில், அலுவலக சேவையில் ஈடுபட்ட 30 பேருந்துகள் சோதனையிடப்பட்டன.
அலுவலக பணியாளர்களிற்காக ஒதுக்கப்பட்ட பேருந்துகளில், பயணிகளும் ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த முறைப்பாட்டையடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பயணிகளை ஏற்றி வந்த 6 அரச அலுவலக பேருந்துகளின் சாரதிகளிற்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் - இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு!
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சேன் யிங்க் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - மிக விரைவில...
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் ...
|
|