பயணிகளுடன் சரிந்தது நெடுந்தாரகை!

குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு பயணிகளை ஏற்றி வந்த நெடுந்தாரகை தரைதட்டும்போது சிறிது சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கை கடற்படையினரது உடனடி செயற்பாடகள் மூலம் பயணிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகை இன்று காலை 10.30 மணியளவில் நெடுந்தீவில் தரைதட்டியது. இதன்போதே சிறிது சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணத்தின்போது நெடுந்தாரகையில் வெளிநாட்டுப் பயணிகளும், பாதிரியாரும், மற்றும் பொது மக்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்துமீறிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ...
அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் - தேர்தல் ஆணைக்குழுவின் முன்...
|
|