பயணச் சீட்டுக்குப் பதிலாக அறிமுகமாகிறது புதிய போக்குவரத்து அட்டை – இன்று கையெழுத்தானது ஒப்பந்தம்!

Wednesday, February 1st, 2023

பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மாகும்புர – காலி அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களுக்கான இந்தப் புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த முறை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள் மொபைல் செலுத்துகைகளும் செயற்படுத் தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: