பயணக் கட்டுப்பாட்டால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன – இன்றுமுதால் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவிப்பு!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கடிதங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்றையதினம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் இன்று முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை பொது மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அத்தியாவசிய சேவைகளில் தபால் சேவையும் இணைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அரச வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பயணக்கட்டுப்பாடு காரணமாக சுமார் 10 இலட்சம் கடிதங்கள் நிலுவையில் காணப்படுவதாகவும் பிரதி தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|