பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!
Saturday, July 24th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா வைரஸானது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதனை சுட்டிக்காட்டியதுடன், வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறும் இராஜாங்க அமைச்சர் மக்களை வலியுறுத்தினார். “எதிர்காலத்தில் புதிய கொரோனா வகைகள் உருவாகலாம். அவை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
திருமறைக்கலாமன்றத்திற்கு வயது ஐம்பத்து இரண்டு!
மலேஷியா செல்கின்றார் ஜனாதிபதி.!
புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!
|
|
|


