பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!
Wednesday, June 30th, 2021
பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கண்டியைச் சேர்ந்த 67 பேரும், கம்பளையைச் சேர்ந்த 56 பேரும், குலியாபிட்டியைச் சேர்ந்த 43 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 45 ஆயிரத்து 532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகளை மீறி மாகாணங்களுக்கு வருகை தந்த 86 பேர் நேற்று திருப்பி விடப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் மீண்டும் உயிர்த்தெழும் வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் வெட்டிபடுகொலை!
வடக்கு - கிழக்கை இணைக்கும் எந்தக்கோரிக்கையும் இல்லை!
நிலவும் மழையுடனான காலநிலை - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!
|
|
|


