வடக்கு – கிழக்கை இணைக்கும் எந்தக்கோரிக்கையும் இல்லை!

Tuesday, July 11th, 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு – கிழக்கை இணைக்கும் எந்தக்கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு வரைபுக்கு நாடாளுமன்றத்தின் சிறுபான்மைக்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல செய்தியாள்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வடக்குகிழக்கை இணைப்பதன் மூலம் தென்னிலங்கையில் இருந்து அவற்றை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

வடக்கு – கிழக்கை இணைத்தல் மற்றும் நாட்டை பிரித்தல் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதில்லை என்பதை தமிழக்கட்சிகள் ஏற்றுள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக,  நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன

இந்தநிலையில், புதிய அரசியல் அமைப்பின்மூலம் அனைவருக்கும் நீதியையும் சமவுரிமையையும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

புதிய அசியலமைப்பு தயாரிக்கப்பட்டவுடன் அது, பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டார்.

Related posts: