பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!
Monday, June 21st, 2021
இலங்கையில் ஆபத்தான டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்த காணப்படுவதால் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிற்குள் வேகமாக விரிவடைந்து வரும் டெல்டா வைரஸ் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கட்டாயம் மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் தெமட்டகொட பகுதியில் இருப்பது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
கணவனை இழந்த பெண் ஒருவருக்கு வாழ்வாதாரமாக கொடுத்த 11 ஆடுகள் குத்திக் கொலை!
சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – நல்லூர் கோயில் வீதியில் சம்பவம்!
08 மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன - இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெர...
|
|
|


