பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக விரைவில் புதிய சட்டம் – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய சட்டமூலம், விசேட நிபுணர்களைக் கொண்ட குழுவினால் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஓரிரு மாதங்களில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக செயற்படுத்தப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில், இச் சட்டத்தில் திருத்தம் செய்யாது புதிய சட்டத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|