பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Sunday, December 4th, 2022
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த இதன்போது பதிலளித்துள்ளார்.
நாட்டு மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சமூக கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்கள் காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சேவை காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் பிரதமருடன் சந்திப...
ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை - அமைச்சர் பந்துல விளக்...
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி ...
|
|
|


