பனை அபிவிருத்தி சபையால் 5 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி!

பனை அபிவிருத்தி சபை ஐயாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்துள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள சபையின் உற்பத்தி நிலையங்களில் இந்த பனை வெல்ல உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த உற்பத்தி நிலையங்கள் ஊடாக சுமார் நாற்பது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
தற்போது முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட பனை வெல்லம் சகல கற்பகம், விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டும் வருகின்றன.
உற்பத்தி செய்யப்படும் பனை, வெல்லங்களை வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்தவும் சபை தயாராகி வருகின்றது.
Related posts:
யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!
20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி - அமைச்சருமான விமல் வீரவன்ச!
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
|
|