பதிவு நடவடிக்கைகள் ஜனவரி 01 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Saturday, December 31st, 2016
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் கருமபீடத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 01ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் பதிவு செய்தல் மற்றும் பதிவுகளை புதுப்பித்தல் நடவடிக்கைகனை பிரதான அலுவலகம் அல்லது பிரதேச அலுவலகங்கள் ஊடாக செய்து கொள்ள முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts:
இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு தபால்துறையை கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!
சைவ சமயத்திற்கு எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் - நல்லை ஆதீன முதல்வர் கோர...
|
|
|


