பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, அடுத்த நாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரவேசிக்குமாறு அறிவிப்பு!
Tuesday, February 14th, 2023
எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, அடுத்த நாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரவேசிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சீர்கேடு காரணமாக இன்று கடவுச்சீட்டு வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளவர்களுக்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் கடவுச்சீட்டு விநியோக சேவைகள் வழமைப்பு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


