பதிவுக்காக 125 புதிய அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Tuesday, February 18th, 2020
125 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்துகொள்ள விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (17) மாலை 4 மணியுடன் நிறைவடைந்தாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானது. அதற்கமைய கிடைத்துள்ள விண்ணப்பங்களை பரீசீலனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பரிசீலனைகளின் பின்னர் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக தெரிவு செய்யப்படவுள்ள அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் நேர்முகதேர்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் அதன் பின்னரே புதிய கட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை 70 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


