பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு..!
தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள்: ஜனநாயகப் பண்பு - ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன!
பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் - தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
|
|