பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு – 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!
Wednesday, December 20th, 2023
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 109 பேரிடம் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 184 பேரை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!
விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தினை வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
சிறு பேருந்து - வேன் மோதி கோர விபத்து.- யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி!
|
|
|


