பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டம் – துறைசார் தரப்பினருக்கு போக்குவரத்து அமைச்சு பணிப்பு!
Friday, March 22nd, 2024
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை குறித்த சேவையை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தொடருந்து திணைக்களம் மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆனையிறவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் - டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு சாதகமான பதில்!
இன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்!
முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை !
|
|
|


