பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Tuesday, November 30th, 2021
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க "புனர்வாழ்வு நிலையம்" அவசியம் - வைத்தியர் சத்...
அந்நிய செலாவணி பற்றாக்குறை - சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ...
|
|
|


