பண்டாரவளை – பூனாகலை மண்சரிவு – 200 பேர் பாதிப்பு – சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
Monday, March 20th, 2023
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு நெடுங்குடியிருப்புகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குறித்த மண்சரிவில் சிக்குண்டவர்களை பிரதேச மக்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் எவருக்கு உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள 64 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை - மருத்துவ அறிக...
3 மாதங்களில் 100 குளங்கள் புனரமைக்கப்படும் – ஜனாதிபதி!
கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!
|
|
|


