பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் !
Friday, February 2nd, 2018
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாததனால் ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் பெப்ரவரி 05ம் திகதிக்கு பின்னர் எந்நேரத்திலும் பணிப்புறக்கணிப்பினைமுன்னெடுக்கலாம் என அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளது சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக உள்ள ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளுக்கு சம்பளப் பிரச்சினையினால் பெரும் அசாதாரண நிலைமையே ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கம்சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பானது அடிப்படை சம்பளத்தின்படி கொடுப்பனவுகள் நிறுத்தம் வரிச் சலுகை மூலம் வழங்கப்பட்ட வாகன அனுமதிப் பத்திரத்தை குறைத்தல்பொதுத்துறை அரச சேவைகளது ஓய்வூதியங்கள் நிறுத்தம் ஆகிய காரணங்களை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மாகாண சபை தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் - பாதுகாப்பு அமைச்...
விரைவில் கோதுமை மாவின் விலை குறைவடையும் - அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்ப...
|
|
|


