பணிக்கு சமுகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட வேதன அதிகரிப்பு – அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, July 11th, 2024

ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் பணிக்கு சமுகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக  அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

ஜூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் பணிக்கு சமுகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக  அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களின் பதவி உயர்வுகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 3 ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2 ஆம் தர ஆசிரியருக்கு 1,335 ரூபாவும், முதலாம் தர ஆசிரியருக்கு 1,630 ரூபா வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: