பட்டாசு கொளுத்த அனுமதி பெற வேண்டும் – பாதுகாப்பு அமைச்சு !
Wednesday, April 10th, 2019
அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் மூலம் ஆராயப்பட்டு வருதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதோடு, இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், 011 2335792 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இவர்கள் தொடர்பில் அறிவிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் விஷேட உத்தரவு - யாழ் சிறையில் 110 பேருக்கு விடுதலை!
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
|
|
|


