படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயன்றவர்களே ஜி.எஸ்.பி பறிபோகப்போவதாகவும் பிரசாரம் செய்கின்றனர் – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, July 13th, 2021
இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இடைநிறுத்தவுள்ளது என்ற அச்சத்தை அரசாங்க விரோத சக்திகளே பரப்புகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழு மூலம் எங்கள் படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டவர்களே தற்போது ஜிஎஸ்பி வரிச்சலுகை குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு கதைகளை பரப்புகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம் ஜிஎஸ்பி வரி;ச்சலுகையை இழக்கும் எந்த ஆபத்துமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீன ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!
இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம் - ஜனாதிபதியின் மேலதிக செயலாள...
தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் - மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
|
|
|


