படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!
Wednesday, November 24th, 2021
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை அடுத்து, இன்று (24) காலை முன்னெடுக்கப்படவிருந்த பேருந்து சேவைக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை, மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து குறிஞ்சாக்கேணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பொதுமக்களால் பேருந்து மறிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேருந்திலிருந்து பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மரண தண்டனையின் இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!
188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை - தொடருந்த...
|
|
|


