காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்!

Friday, March 2nd, 2018

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த அலுவலகத்திற்கு ஜயதீபா புன்னியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹட்டி பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகிய ஆறு பேரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட போதும், குறித்த அலுவலகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளது.

எனினும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: