பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Friday, December 31st, 2021

அனைத்து சவால்களுக்கும் மத்தியிலும் பசுமை விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க கொள்கைகளை செயற்படுத்த உறுதியாக இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய அமைச்சின் புதிய செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இன்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு நல்ல முடிவு, அந்த கொள்கையை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இதன்காரணமாக, எனது அரசியல் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டாலும், நாடு மற்றும் மக்களின் நலனுக்காக இந்தக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தும் அரச தலைவருடன் துணை நிற்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: