பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பி செலுத்தும் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Friday, June 2nd, 2023

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது.

குறித்த கடனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையால திருப்பி செலுத்தவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது..

இந்நிலையில் தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீராகிவரும் நிலையில் கறித்த கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் மீளச் செலுத்திவிடுவோம் என பங்ளாதேஷுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் எனவும் அவர் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: