பக்தர்களிடம் நல்லூர் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை!
Wednesday, November 3rd, 2021
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட ஸ்கந்தசஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சுகாதார துறையினரது அறுவுறுத்தலின் படி, பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு நல்லூர் சிறி கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் உற்சவத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை ஆலய உத்தியோகபூர்வ “YouTube” தளத்தில் நேரலையை ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகையால் ஸ்கந்தசஷ்டி உற்சவ காலத்தில் உற்சவ நேரங்களின் போது நாட்டின் தற்போதைய சுகாதார நடைமுறைகளின்படி பக்தர்களுகள் ஆலயத்தினுள்ளும் வெளிவளாகத்திலும் ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு உற்சவ நேரங்களின் போது ஆலயம் வருவதனை தவிர்த்து வீடுகளில் இருந்து தூர தரிசனம் செய்யுங்கள் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது
000
Related posts:
2017 இல் உள்ளூராட்சி தேர்தல்!
நாளைமுதல் நாடாளாவிய ரீதியல் டெங்கு ஒழிப்பு திட்டம்!
இலங்கையின் மறுசீரமைப்புக்காக யு.எஸ்.எயிட் அமைப்பு நிதி உதவி!
|
|
|


