நோர்வே  – இலங்கை இடையே கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் ஒப்பந்தங்கள்!

Tuesday, March 21st, 2017

இலங்கையில் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையே இது தொடர்பில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

நோர்வே அராங்கத்தின் பிரதிநிதிகளும், அமைச்சர் மகிந்த அமரவீரவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். நோர்வே கடற்றொழில் அமைச்சர் ; இலங்கை கடற்றொழில் அமைச்சர் , நாரா நிறுவன அதிகாரி ஆகியோர்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையின் கடற்றொழில் துறை மூன்று துறைகளில் அபிவிருத்தி செய்யப்படும் என்று நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

நோர்வே அரசாங்கத்தின் கடற்றொழில் துறை தொடர்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பும் இலங்கை மீனவர்களுக்கு கிடைக்கும். கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான கொள்கையும் தயாரிக்கப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களாக கடறறொழலில் துறையில் இலங்கை மற்றும்  இந்தியவுக்குமிடையில் நெருக்கடி நிலை நிலை நிலவிவருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் பற்றிய விசாரணையும்; இடம்பெறுகின்றன. கடற்படை வீரர்கள் ஒழுக்கத்திற்கு முரணான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

Related posts:

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் இழுவை படகுகள் இரண்டு பருத்தித்துறை கடற்பரப்பில் தடுத்துவைப்பு!
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதில் மேலும் தாமதம் - தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கல்வித்துறை கல்விசாரா ...
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் - தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங...