நோபல் பரிசு பெற்ற திரைப்படக் கதாசிரியர் டேரியோ போ காலமானார்!

நோபல் பரிசு பெற்ற இத்தாலிய திரைப்பட கதாசிரியர் டேரியோ போ இன்று காலமானார்.இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்ற திரைப்பட கதாசிரியர் மற்றும் நடிகராவார். இறக்கும் போது இவருக்கு 90 வயது.
டேரியோ போவின் மறைவினால் திரைப்படம், கலாசாரம் மற்றும் பொது வாழ்வில் சிறந்த நபர்களில் ஒருவரை நாடு இழந்துள்ளதாக இத்தாலி நாட்டின் பிரதமர் மேட்டியோ ரென்ஜி தெரிவித்துள்ளார்.
20ம் நூற்றாண்டில் தலைசிறந்த கேலிப்பேச்சு மற்றும் அரசியல் நையாண்டித்தனத்தில் போ சிறந்தவராவார். இவரது ஆக்சிடெண்டல், டெத் ஆம் ஆன் அனார்கிஸ்ட் மற்றும் கான்ட் பே, வோன்ட் பே ஆகியன இவரது படைப்புக்களில் பிரபலமடைந்தவை ஆகும். 1969ம் ஆண்டில் தொலைக்காட்சியில் வெளியான மிஸ்மெரோ பஃபோ (நகைச்சுவையான மர்மம்) என்ற போவின் திரைக்கதை படைப்பு சர்ச்சையை எழுப்பியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
”ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புங்கள்’’: ஊடகங்களுக்கு ஒபாமா வலியுறுத்தல்
பத்திரிகை பேரவை சட்டத்தை சகல ஊடகங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் ஊடகக் பேரவை சட்டமாக மறுசீரமைப்பது தொட...
பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!
|
|