நெல்லைக் கூடிய விலையில் கொள்வனவு செய்ய முயற்சி!
Sunday, July 1st, 2018
பெரும்போக நெல் அறுவடையின் போது நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாய்க்கும் சம்பா அரிசி நெல் ஒரு கிலோகிராம் 42 ரூபாய்க்கும் கொள்வனவு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இதற்கான அமைச்சரவைக்கு குழுவின் அனுதிக்கான பத்திரத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) நடைபெறும் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த போகத்தின் போது மெட்ரிக் டொன் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் நெல் கொள்முதல் செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை திட்டமிட்டுள்ளது.
அதற்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதி மில்லியன் 4800 ரூபாயாகும். தயாரித்து வழங்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைக்கப்பட்ட பத்திரத்துக்கான அங்கிகாரம் அமைச்சரவைக் குழுவால் எதிர்வரும் வாரம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
கிராமசேவை உத்தியோகத்தர்களின் சம்பளம் 2020 இல் அதிகரிக்கும் - அமைச்சர் வஜிர தெரிவிப்பு!
கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா...
15 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தய...
|
|
|


